Rock Fort Times
Online News

காலில் ‘ஷூ’ அணிந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஏறிய அமைச்சர் ரமேஷுக்கு இந்து முன்னணி கண்டனம்…! (வீடியோ இணைப்பு)

108 திவ்ய தேசங்களில் முதன்மையான திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் கிழக்கு கோபுர திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அடிக்கடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கோவில் திருப்பணிகளை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தபோது, காலில் ஷூ அணிந்து கொண்டு கோபுரத்தில் ஏறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக இந்து முன்னணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலின் தெற்கு கோபுரத்தின் திருப்பணியினை பார்வையிடச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், காலணி அணிந்து சென்றுள்ளார். இது, அரங்க நாதனையும், அவருக்கு வாக்களித்த ஸ்ரீரங்கம் தொகுதி மக்களையும் இழிவு படுத்தும் செயலாகும். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்