Rock Fort Times
Online News

திருச்சியில் நீரிழிவுக்கான நல்வாழ்வு பயிற்சி… ஆகஸ்ட் 2-ம் தேதி நடக்கிறது…!

திருச்சி, தென்னூரில் செயல்படும் கிளாசிக் மேம்பாட்டு மையத்தில், நீரிழிவுக்கான நல்வாழ்வு பயிற்சி ஆகஸ்ட் 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9-30 மணி முதல் 12 -30 மணி வரை நடக்கிறது. இதில், நீரிழிவு பற்றிய அடிப்படை அறிவு, உணவு முறை, சர்க்கரை கட்டுப்பாட்டுக்கான யோகா, வாழ்க்கை முறையில் மாற்றங்கள் பற்றி உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணரும், யோகா பயிற்சியாளருமான எஸ். ஆர். பிரியதர்ஷினி விளக்கிக் கூறுகிறார். இதில் கலந்து கொள்வோர் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். இதில் கலந்து கொள்வதற்கு கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழ்கண்ட கூகுள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் விவரம் தேவைப்படுவோர் 98204 51259 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfTsqDLlYfYjWdE-vziOxz5hBVOssH4sre0cEHht5dx0fTjwQ/viewform?usp=publish-editor

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்