காவிரி நீர் பிரச்சனைக்காக எம்ஜிஆர் பாணியை கையில் எடுக்கும் முதல்வர் விஜய்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் சந்திப்பு..!
தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை இன்றல்ல… நேற்றல்ல…பல ஆண்டு காலமாக நீடித்து வருகிறது. தற்போது எப்படி காவிரி வறண்டு கிடக்கிறதோ அதுபோல எம்ஜிஆர் ஆட்சி காலத்திலும் காவிரி வறண்டு போனது. விவசாயம் செய்யவும் தண்ணீர் இல்லை, குடிக்கவும் தண்ணீர் இல்லை. அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் வறட்சி நிலவியதால் எம்ஜிஆர் கர்நாடகாவிற்கு நேரில் சென்று அப்போதைய கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவைச் சந்தித்து பேசியதின் விளைவாக காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு தமிழகத்தில் சில காலகட்டங்களில் வறட்சி நிலவினாலும் எந்த முதலமைச்சரும் கர்நாடகாவிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சட்ட போராட்டங்கள் மூலமாகவே தீர்வு கண்டனர்.
ஆனால், எம்ஜிஆருக்கு பிறகு காவிரி நீர் பிரச்சனை, மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் சத்தியபிரதா சாகு உள்ளிட்டோர் செல்ல உள்ளதாக தெரிகிறது. அவர்கள் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த சந்திப்பின் போது காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை உள்ளிட்ட இரு மாநிலங்களுக்கும் இடையிலான முக்கியமான நீர்வளப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுவதும், கர்நாடகத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதும் இந்த பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தலாம் என அரசியல் வட்டாரங்களில்
பேசப்படுகிறது.

Comments are closed.