தமிழக பெண் போலீஸாரை தவறாக பேசி சமூக வலைதளங்களில் பரப்பிய சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த ரெட் பிக்ஸ் யூடியூப் நிறுவனரும், ஊடகவியலாளருமான பெலிக்ஸ் ஜெரால்டும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர்களில் சவுக்கு சங்கர் மீது சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், தமிழக காவல் துறை அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது. இந்நிலையில், சவுக்கு சங்கரின் சவுக்கு ஊடகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எக்ஸ் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், இதுவரை உங்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த சவுக்கு ஊடகம் மற்றும் அதன் நிறுவனரான சவுக்கு சங்கரை முடக்கும் விதமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை நன்கு அறிவீர்கள். சவுக்கு என்பது ஒரு குடும்பம். அதில் நீங்களும் ஓர் அங்கம். உங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சவுக்கு ஊடகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். நீதித்துறையின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. காலம் வரும் வரை காத்திருப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.