Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் சீரடி சாய் பவுண்டேஷன் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்…!

ஸ்ரீரங்கம் சீரடி சாய் பவுண்டேஷன் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய  இலவச கண் பரிசோதனை முகாம் கல்லணை ரோடு திம்மராய சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீரெங்கசாயி கோவிலில் நடைபெற்றது.  முகாமிற்கு, தொழில் அதிபர் அம்மையப்பா முரளிதரன் தலைமை தாங்கினார். முகாமில் திருச்சி ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குனர் பரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

இந்த மருத்துவ முகாமில், 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அவர்களில் 300 பேர் கண் ஆபரேஷனுக்காக மதுரை அழைத்துச் செல்லப்பட்டனர்.  முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பவுண்டேஷன் சார்பில் உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.  முகாமில், பவுண்டேஷன் டிரஸ்டி டாக்டர் கருணாநிதி மற்றும் பாஸ்கர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த பவுண்டேஷன் சார்பில் இதுவரை 52 இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடந்துள்ளன.

இது 53-வது கண் பரிசோதனை முகாமாகும்.  இதன்மூலம் இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து உள்ளனர்.  ஸ்ரீரங்கம் சீரடி சாய் பவுண்டேஷன் மற்றும் திருச்சி ஜி.வி.என். ரிவர் சைடு மருத்துவமனை சார்பில் கடந்த மே 5-ம் தேதி இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்