திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சியில் உள்ள காட்டூர் சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று புதன்கிழமை தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக அருகில் உள்ள வனத்து சின்னப்பர் கல்லறை தோட்டத்தில் பெரியவர்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் சாமி கும்பிட சென்றனர். அப்போது கல்லறை தோட்டத்தில் சாமி கும்பிடும்போது சாம்பிராணி புகை காரணமாக அருகில் இருந்த ஆலமரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் வெளி கிளம்பியது. அந்த தேனீக்கள் அங்கு சாமி கும்பிட்டு கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோரை தலை, கை, கால், முகம் ஆகிய இடங்களில் கொட்டின.

இதில், காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் பக்தர்களிடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.