Rock Fort Times
Online News

திருச்சி ஐ.ஐ.எம்-ல் படித்த 363 மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு -ஆண்டுக்கு ரூ.43.69 லட்சம் சம்பளம் கிடைக்கும்…!

திருச்சி, ஐ.ஐ.எம்.இல் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட வளாக நேர்காணலில் 363 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன. அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.43.69 லட்சம் சம்பளம் கிடைக்கும்.  இதுதொடர்பாக  திருச்சி ஐஐஎம்-ன் இயக்குநர் பவன்குமார்சிங் கூறுகையில்,  இந்த ஆண்டு நடத்தப்பட்ட வளாக நேர்காணலில் 140 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், திருச்சி ஐஐஎம்  கல்வி நிறுவனத்தில் பயின்ற 363 மாணவ, மாணவிகளுக்கு உயர்பதவி வேலைவாய்ப்பு  கிடைத்துள்ளன.  2 ஆண்டு முழுநேர மேலாண்மை பட்டப்படிப்பாக எம்பிஏ பயின்ற மாணவ, மாணவிகளில் 326 பேருக்கும், எம்பிஏ (மனிதவளம்) பயின்ற 37 பேருக்கும் வேலை கிடைத்துள்ளது.  இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள், அதிகமாக நுகரப்படும் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் (கெயில்,  சிபிசிஎல்) என பல நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளன.  அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.43.69 லட்சம் என்ற ஊதியத்தில் எம்பிஏ பயின்ற மாணவர்களுக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது. எம்பிஏ மனிதவளம் பயின்றவர்களில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.29.86 லட்சம் என்ற வகையில் வேலை அளிக்கப்பட்டுள்ளது. இவைதவிர, சராசரியாக எம்பிஏ மாணவர்களில் ஆண்டுக்கு ரூ.19.43 லட்சம், எம்பி மனித வளம் பயின்றவர்களில் ஆண்டுக்கு ரூ.17.88 லட்சம் என்ற வகையில் வேலை கிடைத்துள்ளது.  அனைவரது கூட்டு முயற்சியாலேயே இத்தகைய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.  இதன்மூலம், திருச்சி ஐஐஎம்-ல் மாணவர்கள் சேர்க்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்