சென்னையில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்ஸில் ஐ.டி. பெண் ஊழியர் மகாலட்சுமி பயணம் செய்தார். கோவையில் அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும் அந்த பெண் இறங்காததால் சந்தேகத்தின்பேரில் நடத்துனர் அந்த பெண்ணை எழுப்பி உள்ளார். ஆனால், மகாலட்சுமி எவ்வித அசைவும் இல்லாமல் இருக்கையில் சரிந்து கிடந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியை பரிசோதித்து பார்த்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மகாலட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்ததும், இதற்காக சொந்த ஊர் சென்ற நிலையில் ஆம்னி பஸ்ஸில் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.