Rock Fort Times
Online News

திருச்சி கூத்தைப்பார் பேரூராட்சியில் காவிரி குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் – தரமற்ற கலவையால் மூடப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு…!

திருச்சி மாவட்டம் , திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட 2, 3 மற்றும் 4வது வார்டுகளில் குடிநீர் இணைப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்தப் பணி முடிந்த பிறகு தோண்டப்பட்ட பள்ளத்தில் ஜல்லியை கலவை கலக்காமல் அப்படியே கொட்டி தரமற்ற முறையில் மூடப்பட்டு வருகிறது.

தேரோடும் வீதிகளில் இப்படி தரமற்ற கலவை மூலம் பள்ளத்தை மூடுகிறீர்களே என்று அப்பகுதி பொதுமக்கள் ஒப்பந்ததாரரிடம் கேட்டதற்கு, தேர் வருவதற்குள் நாங்கள் போட்ட காங்கிரீட் செட் ஆகி விடும் என்று அலட்சியமாக பதில் அளிக்கிறார்.

இதுகுறித்து கூத்தைப்பார் செயல் அலுவலர் சொல்லியும் கண்டு கொள்ளவில்லை. இன்னும் 15 நாட்களுக்குள் கூத்தைப்பாரில் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளதால் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை தரமான முறையில் மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்