Rock Fort Times
Online News

மருத்துவ படிப்பில் சேருவதற்கான “நீட்” தேர்வு- மே மாதம் 5-ம் தேதி நடக்கிறது…!

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர “நீட்” தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, 2024-25-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5-ம்தேதி நடைபெறவுள்ளது. அதற்கான தேர்வு மையங்களை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியிடப்படுகிறது.

கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணைய தளத்திலும், 011-4075 9000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்