Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை காவேரி பழைய பாலம் நாளை ( ஜூன் 25) முதல் மூடல்…!

சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை (NH-38) போக்குவரத்தில் முக்கிய இணைப்புப் பாலமாகத் திகழும் காவேரி பழைய பாலத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அப்பாலம் நாளை (25-06-2026) வியாழக்கிழமை முதல் மூன்று மாதங்களுக்கு மூடப்படுகிறது. நாளை காலை 11 மணி முதல், பராமரிப்புப் பணிகள் முடியும் வரை பாலம் மூடப்பட்டிருக்கும். மாம்பழச்சாலை, சஞ்சீவி நகர் மற்றும் மேல சிந்தாமணி ஆகிய பகுதிகளை இணைக்கும் மிக முக்கியமான போக்குவரத்து வழித்தடம் இது என்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தைத் தவிர்க்க மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுத்து ஒத்துழைப்பு வழங்குமாறு அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்