Rock Fort Times
Online News

எ.வ.வேலு வீட்டில் சோதனை: இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக… மு.க.ஸ்டாலின் காட்டமான பதிவு !

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், ஆளும் கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் எ.வ. வேலு வீட்டில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு. ஆளும் கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்! என தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்