தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தங்கி பணிபுரியும் ஊழியர்கள், கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு இன்று(13-01-2024) முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதால் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இருந்தாலும் கார்,வேன் போன்ற வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.
அந்தவகையில் சென்னையில் இருந்து புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்கள் திருச்சி வழியாக ஒரு சேர சென்றதால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் நீண்ட நேரம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்தை போலீசார் சீர் செய்தாலும் சொந்த ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பதால் போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய சிரமம் அடைந்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.