இலங்கையை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் நிரோஷன் ( வயது 20). இவர், ஸ்ரீரங்கம் அரசு இசைப்பள்ளியில் நாதஸ்வரம் கற்று வந்தார். திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவில் தங்கி இருந்து தினமும் இசை வகுப்புக்கு சென்று வந்தார். இவர், கடந்த 2 நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் நிரோஷனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி டீன் நேருவிடம் கேட்டபோது,
இறந்த மாணவர் நிரோசனுக்கு வைரஸ் காய்ச்சல் இருந்தது. டெங்கு உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தார்
1
of 872
Comments are closed, but trackbacks and pingbacks are open.