கடந்த திமுக ஆட்சியின் போது இல்லத்தரசிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 வரவு வைக்கும் ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அந்த உரிமை தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், தற்போது நிதிநிலை சரியில்லாததால் ரூ.1000 மட்டுமே வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்தத் தொகை மாதந்தோறும் இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் 15-ம் தேதி வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் மாதம் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் ஆடைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிக்க மகளிர் உரிமை தொகை 15ம் தேதி இல்லாமல் முன்கூட்டியே வரவு வைத்தால் பெரும் உதவியாக இருக்கும் என பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே, மகளிர் விருப்பப்படி முன்கூட்டியே அதாவது நவம்பர் முதல் வாரத்திலேயே ரூ.1000 உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இல்லத்தரசிகள் குஷியில் உள்ளனர்.

Comments are closed.