திருச்சி உய்ய கொண்டான் திருமலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான பாரில் கடந்த 21-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார் .அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரது உடல் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தை அணுகி தெரிவிக்கலாம் என்று காவல் நிலைய ஆய்வாளர் அருள்ஜோதி கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.