Rock Fort Times
Online News

மோட்டார் சைக்கிள்கள் மோதல்: திருச்சி மாநகராட்சி அதிகாரியின் உறவினர் பலி…

திருச்சி கருமண்டபம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. ஓய்வு பெற்ற ரயில்வே கூட்டுறவு அதிகாரி. இவர் நேற்று மத்திய பஸ் நிலையம் அருகே வ. உ.சி.சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் மீது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த பழனிச்சாமி படுகாயம் அடைந்தார் . அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன பழனிச்சாமி திருச்சி மாநகராட்சி அதிகாரி வேல்முருகனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்