Rock Fort Times
Online News

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் அன்னாபிஷேகம்…

பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஓவ்வொரு ஐப்பசி பவுர்ணமி தோறும் குபேரலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். அன்னாபிஷேகத்தின் போது லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது என்றும் இதனை தரிசிப்பதால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் இவ்வாண்டு ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் 10 படி அரிசியால் சாதம் சமைத்து கோவிலின் தெற்கு கோபுரம் அருகில் உள்ள குபேரலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் இன்று ( 28.10.2023 ) நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், மஞ்சள், தேன், உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று மாலை சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வது வழக்கம் இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேகம் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியமே நடைபெற்றது.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்