ஒடிசா மாநிலத்தில் குர்தா சாலை கோட்டத்தில் 3- வது ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி – ஹவுரா இடையே இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்சியில் இருந்து பிற்பகல் 1-35 மணிக்கு ஹவுராவுக்கு புறப்படும் ரெயில் (எண்: 12664) வருகிற 18-ந்தேதி, 22-ந்தேதி, 25-ந்தேதி ஆகிய 3 நாட்கள் முழுவதுமாக ரத்து
செய்யப்படுகிறது. அதேபோல, ஹவுராவில் இருந்து மாலை 5-40 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் ரெயில் (எண்: 12663) வருகிற 24 ம் தேதி, 27-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.