Rock Fort Times
Online News

8 பேரை கொலை செய்த ‘சைக்கோ’ கொலையாளிக்கு மேலும் 3 ஆயுள் தண்டனை….

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கிராமத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் 2016-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டதில் அவருடைய நண்பரான சப்பாணி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் நகை, பணத்திற்காக 2012-ம் ஆண்டு முதல் அவரது தந்தை தேக்கன் (75),  தங்கதுரை (35), பெரியசாமி(75), குமரேசன் (50), சத்தியநாதன் (45), விஜய்விக்டர் (27), அற்புதசாமி (70), கோகிலா (70) ஆகிய 8 பேரை கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்குகள் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் 2  வழக்குகளில் அவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பாபு தீர்ப்பளித்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் , 2 வழக்குகளில், ஒரு வழக்கில் இரண்டு ஆயுள் சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனையும் விதித்து இன்று  ( 17.08.2023 ) தீர்ப்பளிக்கப்பட்டது.  

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்