Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும்…

அர்ஜுன் சம்பத் பேட்டி.....

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரே உள்ள தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று ( 17.08.2023 ) திருச்சி கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசு நிலத்தை ஆக்கிரமித்து சட்டத்துக்கு புறம்பாக ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பெரியார் சிலை அமைத்துள்ளனர். அதை உடனடியாக அகற்ற வேண்டும். திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தவிருக்கும் “வள்ளலார் 200 வைக்கம் 100” என்ற விழாவிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். வள்ளலார், நாத்திகம் பேசினார் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்க தயாராக இருக்கிறேன். நடிகர் அஜித்குமார் குறித்து தி.மு.க.மூத்த தலைவர் துரைமுருகன் அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது. அவர், உடனடியாக அஜித்குமாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கருணாநிதி காலத்தில் இருந்தே திமுகவினர் அஜித் குமார் மீது வன்மத்துடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்