Rock Fort Times
Online News

எமிஸ் பணிகளுக்கு 8209 பேர் ; ஆசிரியர்கள் இனி ஹேப்பியா ஸ்கூலுக்கு போகலாம்!

அரசு தொடக்கப் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் சிலபஸ் கற்பிக்கும் ஆசிரியர்கள், பாடத் துணைக் கருவிகளை தயாரித்தல், ஆன்லைன் தேர்வு நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மத்தியில் எமிஸ் இணையதள பதிவேற்ற பணிகளை மேற்கொள்வதில் சிரமம் நீடிப்பதாக கருத்து தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக அலுவலக பணியாளர்கள் இல்லாத நிலையில், நிர்வாக பணிகளையும் இடைநிலை ஆசிரியர்களே மேற்கொண்டிய நிலை இருந்து வந்தது.
இதை ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஆசிரியர் சங்கங்களுக்கான கூட்டத்தில் எடுத்துரைத்த போது விரைவில் இப்பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்தார். அதன்படி எமிஸ் பணிகளுக்காக 8,250 பேரை தனியார் நிறுவனம் மூலமாக நியமம் செய்வது தொடர்பாக அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி கடிதம் எழுதியுள்ளார் இதன் மூலம் ஆசிரியர்களின் நீண்ட கால கனவு கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்