தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மாநகர இளைஞரணி தலைவரும், திருச்சி சாஸ்திரி ரோடு கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி ரெஸ்டாரண்ட் உரிமையாளரான கே.எம்.எஸ்.மைதீன் பிறந்தநாள் விழா, திருச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிக சிறப்பாக நடைபெற்றது. பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜீலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரமைப்பின் திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் வி.ஶ்ரீதர், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், மாநில துணைத்தலைவர்கள் கே.எம்.எஸ்.ஹக்கீம் மற்றும் காவேரி சூப்பர் மார்க்கெட் ஆர்.எம்.ரவிசங்கர், மாநில இணைச்செயலாளர் தீபக், மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.எம்.பி.ஹக்கீம், மாநகர இளைஞரணி செயலாளர் ப.திருமாவளவன், மாநகர பொருளாளர் ஜி.ஜானகிராமன், மாநகர இளைஞரணி துணைத்தலைவர் ஆர்.ஷேக் அலாவுதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஆக்ஸினா குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன் கே.ஜெயகர்ணா, ராக்போர்ட் டைம்ஸ் வார இதழின் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெக்ஷ்மிநாராயணன், தொழிலதிபர் வேதமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சால்வை மற்றும் மலர்மாலைகள் அணிவித்து கே.எம்.எஸ்.மைதீன் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.
Comments are closed.