Rock Fort Times
Online News

திருச்சி சரகத்தில் 77 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்…!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரே காவல் நிலையத்தில் மூன்றாண்டுகள் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி சரகத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றிய 77 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.அவர்கள் பெயர் விவரம் வருமாறு:

சமயபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.கருணாகரன் கரூர் மாவட்டம் வெங்கமேடுக்கும், வெங்கமேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆர்.எஸ்.சரவணன் லால்குடிக்கும், லால்குடியில் பணியாற்றிய கே. உதயகுமார் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்திற்கும்,
திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய சுமதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், அங்கு பணியாற்றிய கௌரி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகரணத்தில் பணியாற்றிய செல்லதுரை திருச்சி மாவட்டம் துறையூருக்கும்,
திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய ராஜா திருக்கோகர் னத்திற்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய சரஸ்வதி புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய வனிதா புதுக்கோட்டை மாவட்டம் sj&hr, பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய செனட் ஜெசிந்தா பெரம்பலூர் மாவட்டம் actu பிரிவுக்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய கோசலைராமன் அரியலூர் மாவட்டம் திருமானூருக்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய சிவகுமார் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கும், அங்கு பணியாற்றிய குணசேகரன் திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கும், அங்கு பணியாற்றிய கோபி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சிக்கும், அங்கு பணியாற்றிய நாகராஜன் திருச்சி மாவட்டம் திருவெறும்பூருக்கும், அங்கு பணியாற்றிய ஞானவேலன் அரியலூர் மாவட்டம் சைபர் கிரைமுக்கும், அங்கு பணியாற்றிய வாணி திருச்சி மாவட்டம் முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், அங்கு பணியாற்றிய சித்ரா புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், அங்கு பணியாற்றிய உஷாநந்தினி கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல, திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய கயல்விழி பெரம்பலூர் மாவட்டம் dcrb பிரிவுக்கும், புதுக்கோட்டை டவுனில் பணியாற்றிய மருது திருச்சி மாவட்டம் சமயபுரத்துக்கும், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடியில் பணியாற்றிய செந்தூர்பாண்டியன் புதுக்கோட்டை டவுனுக்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய வேல்முருகன் கரம்பக்குடிக்கும், திருச்சி பி.ஹெச்.இ.எல். காவல் நிலையத்தில் பணியாற்றிய கமலவேணி புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலுக்கும், பெரம்பலூர் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய கலா திருச்சி பி.ஹெச்.இ.எல்.காவல் நிலையத்துக்கும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பாரதி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், கரூர் மாவட்டம் dcpயில் பணியாற்றிய பத்மா திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய கலைவாணி கரூர் மாவட்டம் dcp பிரிவுக்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய கார்த்திக்பிரியா கரூர் மாவட்டம் சைபர் கிரைமுக்கும், திருச்சி மாவட்டம் ஜீய புரத்தில் பணியாற்றிய சிவசுப்பிரமணியன் புதுக்கோட்டை மாவட்டம் பண்ணைய பட்டிக்கும், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் பணியாற்றிய குணசேகரன் ஜீய புறத்துக்கும், திருச்சி மாவட்டம் சைபர் கிரைமில் பணியாற்றிய கண்ணதாசன் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடிக்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய கருணாகரன் பெரம்பலூருக்கும், ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஜெயசித்ரா புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கும், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய சாந்தகுமாரி திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், திருச்சி மாவட்டம் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய கார்த்திகாயினி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பணியாற்றிய அழகம்மை லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய ராஜேந்திரன் அரியலூர் மாவட்டம் தா.பலூருக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், திருவரம்பூர்-2 பணியாற்றிய சந்திரமோகன் அரியலூருக்கும், பெரம்பலூரில் பணியாற்றிய சக்திவேல் திருச்சி சைபர் கிரைமுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் பணியாற்றிய பிரியா திருவரம்பூர் -2 காவல் நிலையத்திற்கும், திருச்சி மாவட்டம் கானக்கிளியநல்லூரில் பணியாற்றிய விஜய்கோல்டன் சிங் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலுக்கும், அரியலூர் மாவட்டத்தில் dcrb பணியாற்றிய பெரியசாமி காணக் கிளியநல்லூருக்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய அசிம் அரியலூர் dcrb பிரிவுக்கும், திருச்சி மாவட்டம் முசிறி -2ல் பணியாற்றிய பொன்ராஜ் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்துக்கும், அங்கு பணியாற்றிய சந்திரசேகரன் முசிறி 2 காவல் நிலையத்திற்கும், திருச்சி மாவட்டம், வையம்பட்டியில் பணியாற்றிய பிரபு பெரம்பலூர் மாவட்டம் பாடலூருக்கு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் பணியாற்றிய முத்துசாமி திருச்சி மாவட்டம் வையம்பட்டிக்கும், திருச்சி மாவட்டம் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பால கிருத்திகா புதுக்கோட்டை மாவட்டம் சைபர் கிரைமுக்கும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய சுமதி மணப்பாறைக்கும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய மங்கையர்க்கரசி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய மகாலட்சுமி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், திருச்சி மாவட்டம் dcrb பிரிவில் பணியாற்றிய சிவராஜ் புதுக்கோட்டை dcp-1, கரூர் மாவட்டம் dcrb பணியாற்றிய ரூபி திருச்சி மாவட்டம் dcrb க்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய முருகவேல் கரூர் மாவட்டம் dcrb பிரிவுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் பணியாற்றிய ஹேமலதா பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், அரியலூரில் பணியாற்றிய சகாய அன்பரசு இலுப்பூர் காவல் நிலையத்திற்கும், புதுக்கோட்டை மாவட்டம் dcp-1 பணியாற்றிய பாரி மன்னன் பெரம்பலூர் dcb பிரிவுக்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய நிக்சன் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர்க்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய ரமேஷ் கரூர் மாவட்டம் தோகமலைக்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய அரங்கநாதன் அரியலூர் மாவட்டம் செந்துறைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல, திருச்சி மாவட்டம் mt-ar பிரிவில் பணியாற்றிய முகமது அனிபா பெரம்பலூர் டவுன் போக்குவரத்து பிரிவுக்கும், பெரம்பலூர் nh போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய சுப்பையன் திருச்சி மாவட்டம் சமயபுரம் போக்குவரத்து பிரிவுக்கும், திருச்சி மாவட்டம் திருவரம்பூர் போக்குவரத்து பிரிவு கிள்ளிவளவன் பெரம்பலூர் மாவட்ட nh போக்குவரத்து பிரிவுக்கும், கரூர் மாவட்டம் குளித்தலை போக்குவரத்து பிரிவு வெங்கடாசலம் திருவெறும்பூர் போக்குவரத்து பிரிவுக்கும், திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போக்குவரத்து பிரிவு வெங்கடேசன் குளித்தலை போக்குவரத்து பிரிவுக்கும், கரூர் டவுன் போக்குவரத்து பிரிவு புண்ணியமூர்த்தி ஜீயபுரம் போக்குவரத்து பிரிவுக்கும், திருச்சி மாவட்டம் சமயபுரம் போக்குவரத்து பிரிவு தாமஸ்ராஜன் கரூர் டவுன் போக்குவரத்து பிரிவுக்கும், கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் போக்குவரத்து பிரிவு பொன்ராஜ் திருச்சி மாவட்டம் mt-ar பிரிவுக்கும், திருச்சி மாவட்டம் துவாக்குடி போக்குவரத்து பிரிவு ரத்தினம் பசுபதிபாளையம் போக்குவரத்து பிரிவுக்கும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி போக்குவரத்து பிரிவு பாஸ்கர் துவாக்குடி போக்குவரத்து பிரிவுக்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய கார்த்திகேயன் ஆலங்குடி போக்குவரத்து பிரிவுக்கும், திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய ரமேஷ் அரியலூர் போக்குவரத்து பிரிவுக்கும் திருச்சி ரேஞ்சில் பணியாற்றிய மதிவாணன் ஜெயங்கொண்டம் போக்குவரத்து பிரிவுக்கும், ஜெயங்கொண்டம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய சைரா பானு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி போக்குவரத்து பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை திருச்சி சரக டி.ஐ.ஜி. பிறப்பித்துள்ளார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்