Rock Fort Times
Online News

அம்பானி இல்ல திருமணத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய திருச்சியை சேர்ந்த 6 பேர் கைது…!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப், பணம் திருடப்பட்டது தொடர்பாக குஜராத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் மற்றும் லேப்டாப் திருடப்பட்டதாக மீண்டும் புகார் வந்தது. இதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் உள்ள அனைத்து கேமராக்களின் பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதன்மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் படங்கள் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலையம் மட்டும் அல்லாமல், அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது. இதன் பலனாக டெல்லியில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஜெகன், தீபக், குணசேகர், முரளி, ஏகாம்பரம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருச்சி ராம்ஜிநகரை சேர்ந்த பலே கொள்ளையர்கள் ஆவர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையர்கள் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்தது தெரியவந்தது. இதற்காக திருச்சியில் இருந்து புறப்பட்டு ஜாம்நகர் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால், இவர்கள் பல திட்டங்கள் போட்டும் உள்ளே போக முடியவில்லை. இதனால் ஜாம்நகர் வந்து திருட்டில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து ராஜ்கோட் போலீஸ் சூப்பிரெண்டு ராஜு பார்கவ் கூறும்போது:- இக்கூட்டத்தின் தலைவன் மதுசூதனன் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகி உள்ளான். மதுசூதனன்தான் கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டி தருபவன். இந்த கொள்ளையர்கள் கடந்த சில நாட்களில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் 11 இடங்களில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டு உள்ளனர் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்