திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் நீண்ட நாட்களாக இருசக்கர மற்றும், நான்கு சக்கர வாகனங்கள் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. புகாரின்பேரில், திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியில் கேட்பாரின்றி நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மற்றும் ஒரு ஸ்கூட்டரை அரிய மங்கலம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோல பாலக்கரை- மதுரை சாலையில் கால்நடை அலுவலகம் அருகே நின்ற 5 இருசக்கர வாகனங்கள், நெல்பேட்டை சந்திப்பில் நின்று கொண்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை காந்திமார்க்கெட் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் 12 இருசக்கர வாக னங்கள், மணல்வாரித்
துறை சாலையில் 10 இருசக்கர வாக னங்கள் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்தன. அந்த வாகனங்களை பாலக்கரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல கண்டோன்மெண்ட் போலீஸ் சரகத்தில் 9 வாகனங்களும், செசன்ஸ் கோர்ட் போலீஸ் சரகத்தில் 7 மோட்டார் சைக்கிள் களும், ஏர்போர்ட் போலீஸ் சரகத்தில் 6 மோட்டார் சைக்கிள்களும், கோட்டை போலீஸ் சரகத்தில் 14 மோட்டார் சைக்கிளும், உறையூர் போலீஸ் சரகத்தில் ஒரு வாகனமும்,அரசு மருத்துவமனை பகுதியில் 14 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.