திருச்சி சூரியூர் மாதா கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 24). இவருக்கும் நிர்மலா (24) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.இதில், மனவேதனை அடைந்த நிர்மலா கணவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்று இருக்கலாம் என கருதிய பிரேம் குமார் மாமியார் வீட்டுக்குச் சென்று பார்த்தார். ஆனால், நிர்மலா அங்கு செல்லவில்லை.அவர் எங்கு சென்றார்?, என்ன ஆனார் என்று தெரியவில்லை.இதுகுறித்து நவல்பட்டு போலீசில் பிரேம்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நிர்மலாவை தேடி வருகின்றன
Comments are closed, but trackbacks and pingbacks are open.