Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து மணப்பாறையில் அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்…!

திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் சட்டமன்ற திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மணப்பாறை அருகே உள்ள வடக்குசேர்பட்டி கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அதிகம் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் இங்குள்ள சிப்காட் தொழிற்சாலைக்கு பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான ஜாபில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.மிகவிரைவில் அந்த தொழிற்சாலை இங்கு அமைய உள்ளது. அதன்மூலம் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 5000க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். முதலமைச்சர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். தேர்தல் முடிந்தவுடன் அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்றி தருவார். தற்போது இங்கு களத்தில் உள்ள வேட்பாளர் துரைராஜ் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர். மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். இந்த பகுதியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார் எனக்கூறி வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சருடன் மணப்பாறை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்