தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடக்கிறது. மே 4-ம் தேதி வாக்குகள்
எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வாக்குப்பதிவுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் வாக்குச்சாவடி மையங்களில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரே இடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாக்காளர்களுக்கு செய்யப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.