Rock Fort Times
Online News

மதுரை மாநாடு குறித்த திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்

திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க.மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமை தாங்கினார். கூட்டத்தில், முன்னாள் முதல்- அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடக்கும் அதிமுக மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், இந்த மாநாட்டில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர், பெரு ந்திரளாக சென்று கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் பூனாட்சி, மாணவர் அணி புறநகர மாவட்ட செயலாளர் அறிவழகன், அம்மா பேரவை புறநகர் மாவட்ட செயலாளர் ஜி. ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் ஜெயகுமார், ஆமூர் ஜெயராமன், முன்னாள் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ராமு, கல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆர்.வி. பாஸ்கர் மற்றும், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சமயபுரம் நகர செயலாளர் சம்பத் வரவேற்று பேசினார். மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் துரை சக்திவேல் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்