Rock Fort Times
Online News

வால்பாறையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு…!

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் வால்பாறை மலைச்சாலையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்த அந்த வேனில் 16 பேர் பயணம் செய்ததாகவும், அவர்களில் 10 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்