Rock Fort Times
Online News

கடந்த ஓராண்டில் தண்டவாளத்தை கடந்த 230 பேர் உயிரிழப்பு: திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் தகவல்…!

சர்வதேச லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து மத்திய பேருந்து நிலையம் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் சாரண, சாரணியர் இயக்கத்தினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் கூறுகையில்,  திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 220 கால்நடைகள் இருப்பு பாதையை கடந்து செல்லும் பொழுது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன. அதேபோல, ரயில்வே இருப்பு பாதையை கடந்த 230 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சியில் இருந்து விழுப்புரம் வரை இருப்புப்பாதை வழித்தடத்தில் அதிகமான விபத்துகள் ஏற்பட்டுள்ளன.  இந்த வழித்தடத்தில் 143 லெவல் கிராசிங் உள்ளது. திருச்சி ரயில்வே கோட்ட வழித்தடத்தில் ஆளில்லாத ரயில்வே கேட்டுகள் ஒன்றும் இல்லை.  திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில்வே சட்ட விதிமுறைகளை மீறிய நபர்களிடமிருந்து  8 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் அபராதமாக கடந்த ஒரு வருடத்தில் வசூலிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்