ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஹனுமந்து ரமேஷ்(45). இவர் சி.ஆர்.பி.எப்.-ல் போலீஸ்காரராக பணியாற்றினார். ஆனால் அவர் சிறப்பாக செயல்படாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சொந்த ஊரான பெந்துர்த்தியில் வசித்து வரும் ரமேஷ் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். காதலியுடன் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த அவர் குறுக்கு வழியில் சம்பாதிக்க ஆசைப்பட்டார். அதன்படி, தனது காதலிக்கு போலீஸ் எஸ்ஐ உடை அணிவித்து பல பேரிடம் மாமூல் வசூலித்தார். மேலும், வேலையில்லாத இளைஞர்களை குறி வைத்து அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக ஒவ்வொருவரிடமும் பல லட்சம் பெற்றுள்ளார். அந்தவகையில் அவர் சுமார் ரூ.3 கோடி வரை திரட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால், பணம் கொடுத்த இளைஞர்களுக்கு பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து ஐதராபாத்தில் காதலியுடன் சுற்றித்திரிந்த போலீஸ்காரரை கைது செய்தனர். ரமேஷ்க்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளதும் அவர்களை விட்டுவிட்டு காதலியுடன் தனியாக வசித்து வருவதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.