திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில் 20-வது ஆண்டு ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா, ஸ்ரீராதா கல்யாண மகோத்ஸவம்: நாளை 22-ம் தேதி நடக்கிறது…!
திருச்சி, சமஸ்பிரான் தெருவில் உள்ள ஸ்ரீ சப்பாணி சுவாமி கோவிலில் தொடர்ந்து 20-வது ஆண்டுகளாக கிருஷ்ண ஜெயந்தி விழா, ஸ்ரீ ராதா கல்யாண மகோத்ஸவ விழா நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வாளாடி ஸ்ரீரவி பாகவதர், ஸ்ரீ சங்கரன் பாகவதர் மற்றும் குழுவினர் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு 20-09-2024-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஆண்டாள் பஜனை மண்டலி சமஸ்பிரான் தெரு குழுவினரால் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. இன்று 21ம் தேதி சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5-30 மணி வரை தோடய மங்களம், குரு கீர்த்தனங்களும், மாலை 6 மணிக்கு கோபூஜையும் நடக்கின்றன. மாலை 6-15 மணிக்கு மலையாள கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து சீர் தட்டு புறப்படுதல் வைபவம் நடக்கிறது. இதனை திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெஷ்மி நாராயணன் தலைமையேற்று நடத்துகிறார். இரவு 7 மணி முதல் 8 மணி வரை அஷ்டபதி பஜனையும், இரவு 8-30 மணி முதல் 12-30 மணி வரை திவ்ய நாம பஜனை, டோலோற்த்சவம், பிரசாதம் வழங்குதல் ஆகியவையும் நடக்கின்றன.
22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஸத்விருத்தி பஜனையும், காலை 9-30 மணி முதல் 1 மணி வரை ஸ்ரீ ராதா கல்யாணம், ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம், மங்கள ஹாரத்தியும் நடக்கின்றன. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ கிருஷ்ணா யாதவ மேம்பாட்டு கழக தலைவர் எம்.தமிழ்ச்செல்வம் மற்றும் சுப.சந்திரசேகர், சுப.ஞானசேகர், என்.எஸ்.பி.ரவிசங்கர், தமிழ்நாடு யாதவ மகா சபை திருச்சி மாவட்ட தலைவர் ஏ. தங்கராஜ், மாவட்ட செயலாளர் ஜெ.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர் வி.ஸ்ரீதர், எஸ்.ராமலிங்கம், டி.சிவாஜிசண்முகம், வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர் குமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சமஸ்பிரான் தெரு யாதவ சங்க நிர்வாகிகள் தலைவர் டி.தங்கராஜ், பொருளாளர் ஜி.பத்ரி(எ)முகுந்தன், செயலாளர் எம்.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஏ.கண்ணன், பி.சந்திரமோகன், பகவதி எஸ்.பாஸ்கரன், எஸ். கேசவன், லாவண்யா, எஸ்.செல்வராஜ், எம்.ரெங்கநாதன்,
கே.தியாகராஜன், ஜி.லோகநாதன், எம்.எஸ்.முத்துராமன், கே.எம்.ராமகிருஷ்ணன், பி.முத்துகுமார், ஏ.சந்திரசேகர், ஏ.ஏ.கே. மதன்மோகன், எம்.கண்ணன்,
ஆர்.கலியபெருமாள், வி.செல்வரங்கன், தர்மலிங்கம், நெல்லை ஆர்.பாலாஜி, வி. குணசேகரன், ஜி.ரமேஷ் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.
Comments are closed.