திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் ‘கஞ்சா ரெய்டு : சந்தேகப்படும் வீடுகள், கார்களில் அதிரடி சோதனை…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி, ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்ஜி நகர், புங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளர் பாலச்சந்தர் தலைமையில் ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ராம்ஜி நகர், புங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படும் வீடுகளில் சோதனை செய்தனர். மேலும் குப்பை மேடுகள், ராம்ஜி நகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் வாகனங்களில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். ஆனால், இதுவரை கஞ்சா எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நீடித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சோதனையின் போது ஒரு கிலோ அளவிற்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க கட்டப்பஞ்சாயத்து செய்து நிலங்களை அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க”ஆபரேஷன் அகழி” என்கிற பெயரில் நேற்று திருச்சி மாவட்ட மற்றும் மாநகர போலீசார் இணைந்து சரித்திர பதிவேடு குற்றவாளிகள் வீடுகளில் சோதனை செய்தனர். இந்த நிலையில் இன்று ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா ரெய்டு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.