Rock Fort Times
Online News

குடிக்க தண்ணீர் கேட்பதுபோல நடித்து 3 பவுன் நகையை திருடிச்சென்ற பீகார் வாலிபர்கள் 2 பேருக்கு வலை…!

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மனைவி மீனாட்சி (வயது 42). சம்பவத்தன்று மீனாட்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள், மீனாட்சியிடம் தங்கம், வெள்ளி நகைகளை பாலிஷ் போட்டு தருகிறோம். உங்களிடம் நகைகள் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு மீனாட்சி, நகைகள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். பின்னர் அந்த 2 வாலிபர்களும் குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர். மீனாட்சி சமையல் அறைக்கு சென்று தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது அறையில் இருந்த 2 வாலிபர்களும் மாயமாகி விட்டார்கள். வீட்டின் மேஜையில் இருந்த 3 பவுன் நகை காணாமல் போய் இருப்பதை கண்டு மீனாட்சி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசில் மீனாட்சி புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற வாலிபர்கள் 2 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்