Rock Fort Times
Online News

தவெக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டியதில்லை; தானாகவே கவிழ்ந்து விடும்… * எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பில்லை. சட்டம், ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துள்ளது. தமிழகத்திலேயே போதைப்பொருள் தயாரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதுகுறித்து முதல்வர் வாய் திறக்கவில்லை. தொழில் முதலீட்டை ஈர்க்கும் சக்தி தவெக அரசுக்கு இல்லை. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. இறுதி தீர்ப்பு வந்தபிறகுதான் கருத்து சொல்ல முடியும்.
போதைப் பொருட்களை தடுப்போம் என்று வாய்ஜாலம் காட்டாமல் தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செஞ்சி சிறுமி மாயமாகி 40 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை முதல்வர் அதுபற்றி பேசவில்லை. அதிமுகவிடம் 41 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். குறைவான எம்.எல்.ஏக்களை வைத்து எங்களால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்? மக்களுக்கு தவெக ஆட்சி மீது வெறுப்புணர்வு வந்துவிட்டது. இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும் என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்