மலேசியாவில் இருந்து விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், பயணி ஒருவர் கொண்டு வந்த விளையாட்டு பொம்மையின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அதனைத்தொடர்ந்து அந்த பொம்மையை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அப்போது அந்த பொம்மையில் 216.5 கிராம் எடையுள்ள தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் இந்திய மதிப்பு ரூ.12.84 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தங்கத்தை கடத்தி வந்த நபரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.