திருச்சி வரகனேரியில் எழுந்தருளி இருக்கும் குழுமியானந்தா சுவாமிகளின் 124-வது குருபூஜை விழா விமரிசையாக நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு காலை காவிரியில் இருந்து திருமஞ்சனம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து குழுமியானந்தா சுவாமிகள் வார வழிபாட்டு குழுவினரின் திருமறை, திருப்புகழ் திருஅருட்பா பாராயணம் செய்தனர். அதனைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த குருபூஜை விழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது.
1
of 872
Comments are closed.