திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 69 லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது..!
பெண் உள்பட 3 நபர்களிடம் விசாரணை
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தனியார் விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த சாதிக் அலி (வயது 40), அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் காலணியில் மறைத்து கடத்தி வந்த 1.872 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் இந்திய மதிப்பு ரூ.1.08 கோடி என்று அதிகாரி ஒருவர் மதிப்பிட்டார்.
இதேபோல, கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று மற்றொரு விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த செங்குட்டுவன் (37) என்பவர் தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரூ.61.21 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 3 பேரிடம் விமான நிலைய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.