Rock Fort Times
Online News

உலக மனநல  ஆரோக்கிய நாள் விழிப்புணர்வு ஊர்வலம்…

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சாா்பில் நடந்தது..

இன்றைய காலகட்டத்தில் மனரீதியாக சோர்வு அடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு மனநல ஆரோக்கியம் இன்றியமையாததாக உள்ளது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், உலக மன நல ஆரோக்கிய நாளை முன்னிட்டும் இன்று(10.10.2023) பாரதிதாசன் பல்கலைக்கழக சமூக பணித்துறை மற்றும் மிட்டவுன் ரோட்டரி கிளப் திருச்சிராப்பள்ளி இணைந்து நடத்திய மனநல ஆரோக்கியம் மற்றும் மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சமூகப் பணித்துறை இணை பேராசிரியர் ஜே.ஓ .ஜெரிடா ஞானஜனே எல்ஜோ அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னா் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.செல்வத்துக்கு, திருச்சி மிட்டவுன் ரோட்டரி கிளப் தலைவர் பி.கௌரி சங்கர் பொன்னாடை அணிவித்தார்.

     

ஊர்வலத்தை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக காஜாமலை வளாகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம், டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம் வழியாக வந்து ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில், 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் விழிப்புணா்வு பதாகைகளை கைகளில் ஏந்தி கோஷமிட்ட படி ஊா்வலமாக வந்தனா். இதில், ரோட்டரி கிளப் செயலாளர் எஸ். முத்துக்குமரவேல், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தலைமை சமூக பணித்துறை பேராசிரியர் ஆா். மங்களேஸ்வரன், சமூக பணித்துறை பேராசிாியா் ஆா். கார்த்திகேயன் மற்றும் உதவி பேராசிரியர்கள் டி.நிர்மலா, என். ராஜவேல், மகேஸ்வரி , இணை பேராசிாியா் ஏ.சிவகாமி மற்றும் சிறப்பு விருந்தினா் எம். சுரேஷ்குமார், மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை MSW மற்றும் ஆராய்ச்சி மாணவ- மாணவிகள் செய்திருந்தனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்