Rock Fort Times
Online News

தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஏன்?* பெ. சண்முகம்..!

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே தமிழக வெற்றி கழகம், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுகின்றனர். மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் போட்டியிடுகிறது. அதன்படி, தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ப. லட்சுமணனும், மதுராந்தகம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சுகந்தியும் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளனர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு அரசியல் கட்சியோடு கூட்டணி அல்லது உறவு வைத்துக் கொண்ட ஒரே காரணத்திற்காக, அவர்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அர்த்தம் இல்லை. த.வெ.க. ஆட்சியில் இருப்பதற்கு இடதுசாரிகளின் ஆதரவே பிரதானக் காரணம். மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் தவறுகள் நடக்கும்போது இடதுசாரிகள் தொடர்ந்து தங்கள் கண்டனத்தையும், விமர்சனத்தையும் பதிவு செய்வார்கள் என்பதை உறுதிபடக் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்