Rock Fort Times
Online News

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கில் குளறுபடி: அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி குற்றச்சாட்டு…!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு நாளை மறுநாள் 17ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழக அமைச்சர்கள் முன்னின்று விழா ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். அன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்மிகத்தில் அரசியலைக் கலக்கக்கூடாது என்ற போதிலும், இந்தக் குடமுழுக்கு விவகாரத்தில் தேவையற்ற அரசியல் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். பாரம்பரியமிக்க மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு பணிகளில் அதிகாரப்பூர்வ நிர்வாகத் தரப்பில் முறையான ஒருங்கிணைப்பு இன்றி குளறுபடிகள் நடப்பதாக எழுந்துள்ள இந்த விவகாரம் ஆன்மிக அன்பர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்