சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத போது அவையை வழி நடத்துவது யார்? முதல் முறையாக திமுக, அதிமுக எம்எல்ஏக்களுக்கு இடம்!
சட்டப்பேரவை நிகழ்வுகளை சபாநாயகர் வழிநடத்துவார். அவர் அவையில் இல்லாதபோது, துணை சபாநாயகர் வழிநடத்துவார். இருவரும் அவையில் இல்லாதபோது, மாற்றுத் தலைவர்கள் அவையை வழிநடத்துவார்கள். அந்த வகையில், 17-வது சட்டப்பேரவையின் மாற்றுத் தலைவர்களை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று( ஜூன் 19) அறிவித்தார். அதன்படி, மாற்றுத்தலைவர்களாக விஜய் சரவணன் (த.வெ.க.), சத்யபாமா (த.வெ.க.), மதார் பதுருதீன் (த.வெ.க.), காதர் பாட்சா முத்துராமலிங்கம் (தி.மு.க.), தளவாய் சுந்தரம் (அ.தி.மு.க.), தாரகை கத்பட் (காங்கிரஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, மாற்றுத்தலைவர்களாக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தமுறை த.வெ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 3 பேரும், தி.மு.க.. அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தலா ஒருவரும் மாற்றுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாற்றுத்தலைவர்கள் 6 பேரில், 2 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.