இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இன்று (ஜூன் 18) இணைந்தார். 1971ம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பயணிக்கும் மகேந்திரன், பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராக பணியாற்றியவர். கடந்த 2015-ம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட அவர், அத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தவெகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி. மகேந்திரன். “இந்தத் தேர்தலில் தவெக சாதியை தோற்கடித்து காட்டியுள்ளது. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் மக்களிடையே உருவாக்கியுள்ளார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் தவெகவில் இணைந்துள்ளேன். சாதி தோற்கடிக்கப்பட்டிருப்பதை அரசியலில் வியப்புடன் பார்க்கிறேன். சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற அனைத்து பாகுபாடுகளையும் தவெகவின் தேர்தல் வெற்றி உடைத்தெறிந்துள்ளது. சிவப்பு துண்டோடு தவெகவில் தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

Comments are closed.