Rock Fort Times
Online News

திருச்சி உட்பட 44 ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ‘ரெய்டு’…* இடைத்தரகர்கள் ஓட்டம்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்றதிலிருந்து அரசு அலுவலகங்களில் லஞ்சம், ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே,
சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தநிலையில் இன்று(18-06-2026) தமிழகம் முழுவதும் உள்ள 44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பல்வேறு சான்றிதழ்களுக்கு லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சென்னை, தாம்பரம், கோவை, திருச்சி, அரியலூர், கும்பகோணம், காரைக்குடி, பழனி, ஆலங்குடி, கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட 44 இடங்களில் ஒரே நேரத்தில் அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருவதை கண்டதும் இடைத்தரகர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் முறைகேடான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்