திருச்சி சமயபுரம் டோல்கேட்- திருவானைக்காவல் செக்போஸ்ட்டை இணைக்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கொள்ளிடம் நேப்பியர் பாலம் மணல் அரிப்பால் அதன் தூண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் அருகிலேயே சுமார் 6 அடி உயர தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது அந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கி கடல்போல காட்சி அளிக்கிறது. அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீச்சலடித்து குளிப்பது வழக்கம். இந்நிலையில் திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த லூடஸ் என்பவரது மகன் சாம் ரோஷன் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று(22-06-2024) மதியம் அந்த தடுப்பணையில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி மாயமானான். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகுமூலம் சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Comments are closed.