கோவையில் மேற்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டு பணிகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார்…!
கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வரும் சாதனைத் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் பணியில் முக்கியப் பங்காற்றி வரும் பாக முகவர்கள் மற்றும் பாக குழுவினருக்கான மேற்கு மண்டல பயிற்சி மாநாடு கோவையில் விரைவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மாநாட்டு அரங்கு, கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருவதை ஆய்வு செய்து கட்சி நிர்வாகிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கினர். மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த பாக முகவர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ள இந்த மாநாடு, கழக அமைப்பின் வலிமையை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.