பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தியை முன்னிட்டு சென்னை, நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்- அமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் ஆகியோரும் தேவர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதல்- அமைச்சர் விஜய் வருகை தருவதை அறிந்து அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். அவர்களை பார்த்து கை அசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்ற முதல்- அமைச்சர் விஜய், பின்னர் தனது காரில் ஏறி தலைமை செயலகம் புறப்பட்டு சென்றார்.
இலட்சிய பாதை,
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன். சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.