தீபாவளிக்கு ட்ரிபிள் ட்ரீட் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸின் புதிய கிளைகள் திருச்சி, தஞ்சாவூரில் நவம்பர் 1ம் தேதி முதல் கோலாகல ஆரம்பம்…!
பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் முன்னணி நிறுவனமான அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் தமிழகத்தில் பெரம்பலூர், திருச்சி, சென்னை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது. கடந்த 30 வருடங்களில் சுமார் 45 கிளைகளுடன் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் புதிய கிளைகள், திருச்சி, தஞ்சாவூரில் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் கோலாகலமாக உதயமாகவுள்ளது.அதன்படி, திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் பார்ட்டி ஹால் மற்றும் பார்க்கிங் வசதியுடனும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே இயங்கிவரும் கடை தற்போது விரிவுப்படுத்தப்பட்டும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் புதிய கிளையும் திறக்கப்படவுள்ளது. இதற்கான பணிகளில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனர் கே.ஆர்.வி. கணேசன், ஜி.அஸ்வின் மற்றும் நிர்வாகிகளும், பணியாளர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சீடை, தட்டை போன்ற பல்வேறு வகையான கார வகைகளாலும், அதிரசம், லட்டு, பூந்தி, பாதுஷா, டிசர்ட்ஸ் ஸ்வீட்ஸ், பக்லவா ஸ்வீட்ஸ் உள்ளிட்ட இனிப்பு வகைகளையும் பிரத்தியேகமாக தனி சுவையில் தயாரித்து ஆயிரக்கணக்கான மக்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தனக்கென தனி இடம் பிடித்துள்ள அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸின் புதிய கிளைகள் திறப்பு விழாவை எதிர்நோக்கி அப்பகுதி மக்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Comments are closed.